கீச்சுகள் 3


*
அடுத்தவர்களை சிக்க வைக்கும் அளவிற்கு, அடுத்தவர்களைப் பாராட்ட மனம் இடம் கொடுப்பது இல்லை.. 
# பொதுவாக எல்லோர்க்கும்..


*

காற்றுக்கும் ஊற்றுக்கும் கூட மதிப்பு என்பது கலப்படம் இல்லாதவரை தான்..


*


சண்டை போட வேண்டாம் என்று நினைப்பவர்களும் ஆயுதத்தை எடுக்கின்றனர்.. - சமரசம் என்னும் ஆயுதத்தை..

*

எந்த "தோஷமும்" வேண்டாமாம்.. ஆனால் "சந்தோஷம்" மட்டும் வேண்டுமாம்..அனைவருக்கும்

*

ஜாதகத்தைப் பார்த்து வாழ்க்கை சாதகமாக அமையும் என்று இன்னும் நினைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..... நம்மில் பலர்


* 


இன்றைய கால கட்டங்க்களில் கடைசி 30 நிமிடங்களில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிச்சயம் தேர்வு அறைகளில் இருக்கிறது..

****************************************************************

கீச்சுகள் 2

*
அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் முடிந்த தேர்தலுக்கா? வரும் தேர்தலுக்கா?

*

வார்த்தைகள் புதிதாக உருவாக்கப்படுவதில்லை.. மாறாக வார்த்தைக் கோர்வைகள்தான் புதிதாக உருவாக்கப்படுகின்றன..       -ரசிப்பதற்காக





*
தமிழ்ப்பற்று குறைவாக இருந்தாலும் தமிழ் வரவு அதிகம் இருந்தாலே நல்லதுதான்..


*
கையில் கைகடிகாரம் கட்டி இருந்தும் அலைபேசியில் மணிபார்க்கும் வினோத பழக்கும்.. - எனக்கு மட்டுமல்ல..........


*
"தீயா" வேலை செய்யறது மட்டும் முக்கியமல்ல.. அதை "நீயா" செய்யனும்.. அதுதான் முக்கியம்..

*

"ம்ம்ம்ம்ம்" என்பது பல நேரங்களில் பல அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கின்றது..


*********************************************** 

கீச்சுகள் 1


*
மாற்றங்களை எதிர் பார்க்கும் பலர் முதலில் தவிர்க்க வேண்டியது தடுமாற்றத்தைத் தான்

*

நிரந்தர முடிவுகளை, சில தற்காலிக முடிவுகள் வென்றுதான் விடுகின்றன





கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்று சொல்லும் அதே பத்திரிக்கைகளில் தான் அவ்வளவு பள்ளி விளம்பரங்களும்... 
     -சமீப காலங்களில்

*

சிந்திக்க தெரிந்தவனுக்கு 'சிம்மாசனம்வெகு தொலைவில் இல்லை..


*
இன்று வரை எதுவாலும் வெல்ல முடியவில்லை -தாயின் அன்பை

*

அன்று முதல் இன்று வரை எத்தனை கதாசிரியர்களை, புலவர்களை, ஓவியர்களைக் காண முடிகிறது.. 
    - பள்ளிக் கழிவறைகளில்

*

இன்றும் பல்வேறு அலுவலகங்களில் செல்போன் தான் பேப்பர் வெயிட்டாக பயன்பாட்டில் இருக்கின்றது..

*

சிலவற்றை மறக்க வேண்டும்’, ‘மறக்க வேண்டும்என்று நினைத்துக்கொண்டே இருக்கின்றோம்...

*

இளமையில் புலமை இப்போதைய நிலைமையில் வளமை..

*********************************