நானு லோடு மேனு




கண்ணில் பல கனவுகளோடு
மனதில் நிறைய ஆசைகளோடு
கையில் காய்த்த காப்புகளோடு
சீக்கிறம் ஆறா காயங்களோடு

மாட்டை ஓட்டும் சாட்டைகளோடு
மூட்டை தூக்கும் ஊக்குகளோடு
சீருடையான வேட்டி துண்டோடு
திடமாக கட்டிய உருமாலையோடு

திட்டியே தீர்க்கும் அதிகாரிகளோடு
ஒட்டியே உடனிருக்கும் தொழிலாளிகள் நட்போடு
அட்டி அடுக்கும் வண்டிகளோடு
போராடியே பெறும் மாமூல்களோடு

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றோடு
ஓடி ஓடி ஓடாய் உடைந்து சேர்த்த காசு இருநூறை வைத்து
குடும்பம் நடத்துற மனைவியை நினைத்தும்
கொடுத்ததை தின்கிற புள்ளையை நினைத்தும்

சிரித்து மகிழ்கிற பெற்றோரை நினைத்தும்
ஆறுதல் அடையுது இந்த ஆசாமி மனசு
காலைல மீண்டும் கந்து வட்டிக்காரன் நினைவு வந்ததும்
உடனே ஊக்கை தூக்குற நானு லோடு மேனு...
.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை கலங்க வைத்தது....

தினேஷ் பழனிசாமி said...

வயிறு என்ற ஒன்று உள்ளதே........

cheena (சீனா) said...

அன்பின் தினேஷ் பழனிசாமி

கவிதை அருமை - வறுமையின் வலி - கொடுத்ததை வைத்து குடும்பம் நடத்துகிற மனைவி - கொடுத்ததைத் தின்கிற குழந்தை - சிரித்து மகிழ்கிற பெற்றோர் - இவர்கள் தான் ஆறுதல் - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தினேஷ் பழனிசாமி said...

:-)

கார்த்திக் சரவணன் said...

மனம் கனக்க வைக்கும் கவிதை...

அ.பாண்டியன் said...

வாழ்க்கை என்ற ஒன்றும் வயிறு என்ற ஒன்றும் இருக்கிறதே! வறுமையிலும் உறவுகளின் மகிழ்ச்சி எண்ணி மனமகிழ்வது சிறப்பு. கனமான சூழலை வெளிப்படுத்து கவிதை அருமை.