மனமார்ந்த மண வாழ்த்து


கெட்டி மேளங்கள் சத்தமாய் முழங்க
நாதஸ்வரமும் இதமாய் இசையமைக்க
முன்னோர்கள் சான்றோர்கள்
ஆசிகள் பல அமைய

பட்டாடை பளபளக்க
மலர் மாலையும் மணமணக்க
மணமகனும் மணகளும்
மின்னொளியில் ஜொலி ஜொலிக்க

மங்கை அவள் கழுத்தினிலே
மன்னன் இவன் மாலையிட
கண்ணன் ராதை ஜோடியென்று
கண் குளிர வாழ்த்திடவே

இல்லறத்தின் இலக்கணமாய்
எப்பொழுதும் கூடி வாழ்ந்து
வாழ்க்கையினை வாழ்ந்திடவே
வாழ்த்துகிறேன் இப்பொழுதே

வாழ்க வாழ்கவே
வாழ்க பல்லாண்டு...

.

3 comments:

வெற்றிவேல் said...

எங்கோ கேட்ட பாடல் மாதிரி உள்ளது...

நன்று...

திண்டுக்கல் தனபாலன் said...

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துக்கிறேன்...

அ. பாண்டியன் said...

வாழ்த்துக்கள். வாழ்க வாழ்கவே வாழ்க பல்லாண்டு.