பயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பயனளிக்குமா பண்ணைக் குட்டை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாகக் கூட இந்தக் கட்டுரையை வைத்துக் கொள்ளலாம். மழை இவ்வளவு விரைவில் எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் நாங்கள் அமைத்திருந்த பண்ணைக் குட்டை முழுவதும் தண்ணீர் நிறைந்தது எங்களுக்கு மிகவும் மன நிறைவாக உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்னும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்றவாறு இயற்கை அளித்த இந்த மழை, கனவுகளோடு காத்துக் கொண்டிருந்த அந்த நாட்கள் நிறைவேறியது போல ஒரு மன மகிழ்ச்சி.

மழை நீர் சேகரிப்பு பற்றி பல ஊடகங்கள் வாயிலாக நமது அரசாங்கமும், பல சமூர்க ஆர்வலர்களும் அவர்களால் இயன்ற வரை மக்களிடம் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனாலும் மக்கள் இதை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நாட்களில் மக்கள் குடி நீருக்குக் கூட குடங்களைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர்களுக்குச் செல்வதும், தண்ணிரை தொலைவிலிருந்து வாங்கி உபயோகிக்கும் நிலையும் உள்ளது. ஆனால் மக்கள் முழு மனது வைத்து மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் மட்டம் கனிசமாக உயரும். அதனால் நீர் வளமும் உயரும். குடி நீர் பிரச்சினை என்பது நம்மை நெறுங்க முடியாத அளவிற்கு நம்மை நாமே காத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அருகாமையில் நிரம்பிய ஏரி ஒன்றின் புகைப்படம்


மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர வைக்க அப்படியொரு அருமையான திட்டம் தான் இந்த பண்ணைக் குட்டை திட்டம். அதிகமாக மழை பெய்யும் நாட்களில் மழை நீர் வீணாக ஆறுகளில் சென்று கலப்பதன் மூலம் மழை பெய்யும் இடங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வது சந்தேகம் தான். மாறாக முடிந்த வரை மழை நீரை அந்தந்த இடத்திலேயே இது போன்று பண்ணைக் குட்டை அமைத்தும் நீரை முழுவதுமாக பூமிக்குள்ளேயே செலுத்தலாம். இதன் மூலம் கிணறுகளும், ஆழ் துளைக் கிணறுகளும் மிக விரைவிலேய பயன் பெறும்.


 நிரம்பிய பண்ணைக் குட்டை


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எங்கள் ஊரில் பெய்த கன மழையால் நாங்கள் ஏற்படுத்தியிருந்த இந்த பண்ணைக் குட்டை முழுவதும் நிரம்பியது. இதன் காரணமாக அருகாமையில் இருந்த கிணறும், ஆழ்துளைக் கிணறும் இரண்டு நாட்களிலேயே பயன் பெற்றது என்பது நெகிழ்ச்சியான தருணம் தான்.

நாம் நம்முடைய எதிர்கால வாழ்விற்கு பொன், பொருள் சேமித்து வைப்பது மட்டுமல்ல நீரையும் சேமித்து வைப்பது இன்றைய சூழலுக்கு மிக மிக தேவையான ஒன்றே..


--------------------------------

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லோரும் ஒற்றுமையுடன் இது போல் செயல்பட வேண்டும்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்
நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை இப்படி செற்பட்டால் தண்ணீர் பிரச்சினை என்ற ஒன்று இருக்காது ...வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு. மழை நீர் சேகரித்தல் இன்றையக் காலத்தில் மிக அவசியமான ஒன்று. நம் மக்கள் பலரும் எவ்வளவுப் பட்டாலும் நல்ல விடயங்களை முன் நின்று செய்யவே மாட்டார்கள். தங்களின் இந்தப் பண்ணைக் குட்டை முறைப் பற்றி தகவலை ஆங்கிலப் பதிவில் பயன்படுத்தலாமா? அறியப்படுத்துங்கள்.

வெளங்காதவன்™ said...

அருமை. நானும் பண்ணைக் குட்டை ஒன்று தோண்டியுள்ளேன், மானியத்துடன்.


:-)

வெளங்காதவன்™ said...

நம்மோடது 50 X 45 X 8

வெளங்காதவன்™ said...

இந்தத் திட்டம் வருவதற்கு முன்பே 20க்கு 20ல நாலடி ஆழத்துல தோண்டி வச்சிருந்தோம்.

தினேஷ் பழனிசாமி said...

அருமை

தினேஷ் பழனிசாமி said...

மழை நீரை சேகரிக்க நல்ல திட்டம் முன்னதாகவே உங்கள் மனதிற்குள் எழுந்ததற்கு வாழ்த்துகள்

தினேஷ் பழனிசாமி said...

ஆங்கிலத்திலும் பதிக்க முடிந்த வரை முயற்சிக்கிறேன்..

தினேஷ் பழனிசாமி said...

எங்களுக்கு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொண்டது..

தினேஷ் பழனிசாமி said...

நிச்சயமாக.. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..

தினேஷ் பழனிசாமி said...

வருங்காலத்தை மனதில் எண்ணும் போது தண்ணீர் தட்டுப்பாடு தான் கண் முன்னே நிற்கின்றது..

கி. பாரதிதாசன் கவிஞா் said...


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

மாற்றுப்பார்வை said...

அருமையானதோர் பதிவு