மரியான்- திரை விமர்சனம்

மரியான் திரைப்படம் பற்றிநாயகன்   - தனுஷ் (மரியான்)
நாயகி      - பார்வதி (பனிமலர்)
இயக்கம்   -  பரத்பாலா
இசை     - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு - மார்க் கொனிக்ஸ் (ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராம்)படத்தின் (மற்றும் நாயகன்) பெயரான மரியான் என்றால் சாவே இல்லாதவன் என்று நாயகனே கதையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்.. எனக்கு அப்பொழுது தெரியவில்லை, அதுதான் கதையே என்று, பிறகு முடிவில் தெரிந்தது..

ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் ஆரம்பித்து அப்படியே கதை பின்னோக்கி நகர்ந்து இந்தியாவில் உள்ள ஒரு கடலோர ஊரையே சுற்றி முதல் பாதி மிகவும் மெதுவாகவே நகர்கிறது...புகை, குடி என்ற நாயகனுக்கு உண்டான அனைத்துத் தகுதிகளுடனேதான் (!) மீனவனாக நாயகனும் முதல் பாதியில் வலம் வருகிறார்.. தோழனாக வருகிறார் அப்புக்குட்டி, அப்புறம் அவருக்கு ஆயுள் இல்லை பாவம் (!)..


நாயகனை ஒருபுறமாகவே காதலித்து வரும் அதே தெருவில் உள்ள ஒரு மீனவக்குடும்பப் பெண்ணாக நாயகி பார்வதி, கடைசியில் ஒரு வழியாக நாயகனிடம் காதல் வசப்பட்டு இருபுறக்காதல் ஆகின்றது.. பின்னர் காதலை மையப்படுத்தியே கதையும் செல்கின்றது..


பூ, சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பார்வதி.. இதற்குப் பின் அவருக்கு நிச்சயம் நிறைய பட வாய்ப்புகள் வரலாம்..


இரண்டாம் பாதியில்தான் கொஞ்சம் கதை சூடு பிடிக்கின்றது.. தன் இரண்டு வருட ஒப்பந்த வேலை முடிந்து சூடானிலிருந்து இந்தியா திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக சில தீவிரவாதிகளிடம் மாற்றிக்கொண்டு விடுகிறார்.. பிறகு எப்படி அவர்களிடமிருந்து தப்பித்து, நாயகியிடம் சேர்கிறார் என்பதுதான் மீதிக்கதை..


பலம்:

èதனுஷ் மற்றும் பார்வதியின் நடிப்பு,

è ரஹ்மானின் இசை
à பாடல்கள் மனதில் நிற்கின்றன.. (முன்னரே கேட்டவ்ர்களுக்கு)
à அவரின் தாடியும் கூட ( ஒட்டுத்தாடிக்கு அவசியம் இல்லாததால்)


பலவீனம்:

à நடிகர், இசையமைபாளர், ஒளிப்பதிவாளர் என மிகப் பெரிய கூட்டணி இருந்தும் மக்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை..
à மார்க் கொனிக்ஸ் இன்னும் கொஞ்சம் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்
à திரைக்கதை மிகவும் மெதுவாகவே நகர்கிறது.. கடைசியாக சிங்கம்2 பார்த்தவர்களுக்கு மிகவும் பொறுமை அவசியம்..
à ஒரு காட்சியில் நாயகியைக் காலால் நாயகன் உதைக்கும் பொழுது, தியேட்டரில் இருந்த பலருக்கும் அந்த காட்சியில் உடன்பாடு இல்லை என்பது தெரிகிறது..


மொத்தத்தில் படம் குறிப்பிட்ட தரப்பினரைக் குஷிப்படுத்தா விட்டாலும் இப்பொடியொரு படைப்பினை தரத் துணிந்த இயக்குனர் பரத்பாலாவைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்..

மரியான்- ஒருமுறை பார்க்கலாம்....


2 comments:

Gunasekaran Muthusamy said...

simple and superb machi

தினேஷ் பழனிசாமி said...

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழா..