கீச்சுகள் 1


*
மாற்றங்களை எதிர் பார்க்கும் பலர் முதலில் தவிர்க்க வேண்டியது தடுமாற்றத்தைத் தான்

*

நிரந்தர முடிவுகளை, சில தற்காலிக முடிவுகள் வென்றுதான் விடுகின்றன

கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்று சொல்லும் அதே பத்திரிக்கைகளில் தான் அவ்வளவு பள்ளி விளம்பரங்களும்... 
     -சமீப காலங்களில்

*

சிந்திக்க தெரிந்தவனுக்கு 'சிம்மாசனம்வெகு தொலைவில் இல்லை..


*
இன்று வரை எதுவாலும் வெல்ல முடியவில்லை -தாயின் அன்பை

*

அன்று முதல் இன்று வரை எத்தனை கதாசிரியர்களை, புலவர்களை, ஓவியர்களைக் காண முடிகிறது.. 
    - பள்ளிக் கழிவறைகளில்

*

இன்றும் பல்வேறு அலுவலகங்களில் செல்போன் தான் பேப்பர் வெயிட்டாக பயன்பாட்டில் இருக்கின்றது..

*

சிலவற்றை மறக்க வேண்டும்’, ‘மறக்க வேண்டும்என்று நினைத்துக்கொண்டே இருக்கின்றோம்...

*

இளமையில் புலமை இப்போதைய நிலைமையில் வளமை..

*********************************

No comments: