கீச்சுகள்- 13


புறப்பட்ட இடமும், சேர்ந்த இடமும் சரி என்பதற்காக வந்த பாதைகள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது...

*

ஆகச்சிறந்த ஆயுதங்கள்
தேவையில்லை.,
சிறிய விளக்கை
அணைக்க..



 *

விதிகளே சரியாக இல்லாத போது விதி மீறலைப் பற்றி என்ன பேசி என்ன பயன்??...

*

இந்த மண்ணிற்கு அப்படி என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்து விடப் போகிறது அந்த வானத்திடம்..
மழையைத் தவிர...

*


சாதனைக்காக படைப்புகளை உருவாக்க வேண்டியதில்லை..
நல்ல படைப்புகள் தானாகவே சாதனையை உருவாக்கும்...


*

கேள்வி என்பது மற்றவர்களைக் கேட்க மட்டமல்ல, நம்மையே நாம் கேட்பதற்கும் தான்...


*


அடையாளம் தெரியாமல் காணாமல் போனவைகள் பட்டியலில் நேற்றைய மழை தான் இன்று முதலிடம் பிடிக்கிறது....

*

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுமந்துகொண்டு நம்பிக்கை என்னும் கயிற்றால் இழுக்கப்படுவதுதான் வாழ்க்கைக்தேர்....

*


மௌனத்தின் எண்ணிலடங்கா அர்த்தங்களில் ஒன்று தான் இந்த 'சம்மதம்'...

---------

2 comments:

Anonymous said...

வணக்கம்
மௌனத்தின் எண்ணிலடங்கா அர்த்தங்களில் என்று தான் சம்மதம்
ஒவ்வொரு வரிகளும் மிக நன்று வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி said...

மௌனத்த்துக்கு ஆயிரம் அர்த்தமுண்டு. சரிதான்