புறப்பட்ட இடமும், சேர்ந்த இடமும் சரி என்பதற்காக வந்த பாதைகள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது...
ஆகச்சிறந்த ஆயுதங்கள்
தேவையில்லை.,
சிறிய விளக்கை
அணைக்க..
தேவையில்லை.,
சிறிய விளக்கை
அணைக்க..
விதிகளே சரியாக இல்லாத போது விதி மீறலைப் பற்றி என்ன பேசி என்ன
பயன்??...
இந்த மண்ணிற்கு அப்படி என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்து விடப்
போகிறது அந்த வானத்திடம்..
மழையைத் தவிர...
மழையைத் தவிர...
*
சாதனைக்காக படைப்புகளை உருவாக்க வேண்டியதில்லை..
நல்ல படைப்புகள் தானாகவே சாதனையை உருவாக்கும்...
நல்ல படைப்புகள் தானாகவே சாதனையை உருவாக்கும்...
கேள்வி என்பது மற்றவர்களைக் கேட்க மட்டமல்ல, நம்மையே
நாம் கேட்பதற்கும் தான்...
அடையாளம் தெரியாமல் காணாமல் போனவைகள் பட்டியலில் நேற்றைய மழை
தான் இன்று முதலிடம் பிடிக்கிறது....
எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுமந்துகொண்டு நம்பிக்கை
என்னும் கயிற்றால் இழுக்கப்படுவதுதான் வாழ்க்கைக்தேர்....
மௌனத்தின் எண்ணிலடங்கா அர்த்தங்களில் ஒன்று தான் இந்த 'சம்மதம்'...
---------
2 comments:
வணக்கம்
மௌனத்தின் எண்ணிலடங்கா அர்த்தங்களில் என்று தான் சம்மதம்
ஒவ்வொரு வரிகளும் மிக நன்று வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மௌனத்த்துக்கு ஆயிரம் அர்த்தமுண்டு. சரிதான்
Post a Comment