கீச்சுகள் 3


*
அடுத்தவர்களை சிக்க வைக்கும் அளவிற்கு, அடுத்தவர்களைப் பாராட்ட மனம் இடம் கொடுப்பது இல்லை.. 
# பொதுவாக எல்லோர்க்கும்..


*

காற்றுக்கும் ஊற்றுக்கும் கூட மதிப்பு என்பது கலப்படம் இல்லாதவரை தான்..


*


சண்டை போட வேண்டாம் என்று நினைப்பவர்களும் ஆயுதத்தை எடுக்கின்றனர்.. - சமரசம் என்னும் ஆயுதத்தை..

*

எந்த "தோஷமும்" வேண்டாமாம்.. ஆனால் "சந்தோஷம்" மட்டும் வேண்டுமாம்..அனைவருக்கும்

*

ஜாதகத்தைப் பார்த்து வாழ்க்கை சாதகமாக அமையும் என்று இன்னும் நினைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..... நம்மில் பலர்


* 


இன்றைய கால கட்டங்க்களில் கடைசி 30 நிமிடங்களில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிச்சயம் தேர்வு அறைகளில் இருக்கிறது..

****************************************************************

No comments: